சங்கம் உருவாகிய வரலாறு

ஈரோடு பேரமைப்பு
  • மனிதன் தான் தின்ற பின் வீசி எரிந்த கொட்டை மண்ணில் மீண்டும் முளைத்து வருவதைக் கண்டபின் உழவுத் தொழிழுக்கான அறிவை பெற்றான். அப்படி விளைச்சலான தானியங்கள் தனக்கும் தனது குடும்பங்களுக்கான தேவைக்கு போக எஞ்சியதை மற்ற மனித குழுக்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களிடம் இருந்த மிகுதிப் பொருட்களை பண்ட மாற்ற முறையில் மாற்றிக் கொண்டு வாழ்ந்து வந்தான்.
  • அதிக மனித உழைப்பு மற்றும் உழவு தொழிழுக்கான உபகரணங்கள் வரவு மிகை உற்பத்தியை உருவாக்கியது. மிகை உற்பத்தியான பொருட்களுக்கான மதிப்பில் நாணயங்கள் உருவாக்கப்பட்டன. ஓர் இடத்தில் இருந்து வேறு சில இடங்களை தேடிச் சென்று தனது உற்பத்தி பொருட்களை அங்கு வாழ்ந்த மக்களுக்கு கொடுத்து அங்கு கிடைத்த பொருட்களை தான் வாழ்ந்த பகுதி மக்களுக்கு கொண்டு வந்து வழங்கிய ஓர் வணிகச் சமூகமாக உருவாகியது.
  • இப்படி பல்வேறு தேசத்து மக்களுக்கும் அவரது பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் போன்றவைகளை ஒரு நாட்டோர் மற்ற நாட்டார் மனிதநேய உணர்வோடு பகிர்ந்து உலகம் முழுவதும் ஓர் நாகரிக வளர்ச்சி வளர்ந்து வர வணிகச் சமூகமே முகாமையான பங்காற்றி வந்தது.மேலும் இன்று வரை பங்காற்றியும் வருகிறது.
  • ஆனால் தற்போது உலகில் ஏகபோக முதலாளித்துவம் எனும்போக்கு வளர்ந்து பல கோடி மக்களின் உற்பத்திகளை, தொழில்களை ஒருசில கார்பொரேட்களின் கையில் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.வளர்ந்து விட்ட அறிவியல் கணினி தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம் போன்றவை கார்பொரேட்களுக்கு சாதகமான எல்லாவித வேலைகளையும் செய்து வருகின்றன. இப்போக்கால் நடுத்தர சிறு குரு உற்பத்தியாளர்கள், வணிகர்கள் தங்கள் துறைகளிலிருந்து வெளியேறி வருகின்றனர். இந்நிலை தொடருமானால் இன்னும் 5 ஆண்டுகளில் அனைத்துமே ஒரு சில கார்பொரேட் முதலாளிகள் கைகளுக்கு சென்றுவிடும்.
  • இந்நிலையை தடுத்து நிறுத்த வேண்டுமானால் நாமும் அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நமக்குள் ஒரு தகவல் தொழில்நுட்ப வலை பின்னலை உருவாக்கி செயல் பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அவ்வகையிலேயே தமிழகத்தின் அனைத்து சிறு குறு உழவர்கள், வணிகர்கள், தொழில் முனைவோரை ஓரணியில் திரட்டவே எமது இந்த தகவல் தொழில் நுட்ப அணியை உருவாக்கியுள்ளோம்.                                                           

கற்போம்! கற்பிப்போம்! வாழ்வாதாரம் காப்போம்!

உறுப்பினராக சேர

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு- ஈரோடு பேரமைப்பு

With Best Compliments from

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு- ஈரோடு பேரமைப்பு